முதல் சர்வதேச கோப்பையை வென்ற மெஸ்ஸி!

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றது. தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசில் நடைபெற்று வந்தது. 10 நாடுகள்…

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றது.

தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசில் நடைபெற்று வந்தது. 10 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் பிரேசில், அர்ஜெண்டினா, கொலம்பியா, பெரு ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதியில் அர்ஜெண்டினா அணி கொலம்பியாவையும், பிரேசில் அணி பெருவையும் வீழ்த்தின.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி, நடப்பு சாம்பியன் பிரேசிலை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணி வீரர் ஏங்கல் டி மரியா கோல் அடித்து அசத்தினார். இதனால் அர்ஜெண்டினா அணி முன்னிலை பெற்றது.

பதில் கோல் திருப்ப பிரேசில் அணி எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. நெய்மர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களின் முயற்சிகளுக்கு அர்ஜெண்டினா வீரர்கள் முட்டுக்கட்டை போட்டனர். இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

கடைசியாக 1993ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்த அர்ஜெண்டினா, 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோப்பையை கையில் ஏந்தியுள்ளது. இதே போல், உலகின் தலைசிறந்த வீரராக கருதப்படும் லியோனல் மெஸ்ஸி, தனது முதல் சர்வதேச கோப்பையை கைப்பற்றியுள்ளார். டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இது ட்ரெண்டாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.