முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோட்டில் பாஜகவே போட்டியிட்டாலும் நாங்கள் முன் வைத்த காலை, பின் வைக்க மாட்டோம் – ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால், அதிமுக வேட்பாளரை திரும்பப்பெறாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அதற்கு பிப்ரவரி 27ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அதிமுகவில் ஓபிஎஸ் – இபிஎஸ் என இரு பிரிவுகளாக போட்டியிடும் நிலையில் நேற்று இவ்விருவரின் அணிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். இபிஎஸ் அணி சார்பில் அதிமுக ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக உள்ள கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் ஒவ்வொன்றாக தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் இன்று சென்னை தலைமை செயலகம் வந்து தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவை சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போலி வாக்காளர்களை நீக்கவேண்டும் என மனு அளித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயக அத்துமீறல்கள் நடைபெற்று வருகிறது. 238 வாக்குச்சாவடியில் அதிமுகவினர் உறுதி செய்யும்போது 30,000 – 40,000 பேர் வரை ஆளே இல்லாமல் வாக்குகள் உள்ளது. அதனால் போலி வாக்காளர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளேன். அதிமுக இரட்டை இல்லை சின்னம் முடக்கம், முடக்கம்னு நீங்கள் தான் சொல்றீங்க. இரட்டை இலை சின்னம் முடக்கப்படாது என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து ஒ பி எஸ் அணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அது ஒரு மண் குதிரை என்பது பொதுமக்களுக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும் தெரியும். உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிட்டதே கிடையாது. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணிதான் தொடர்கிறது. அனுமான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. தற்போதைய நிலை குறித்துதான் சொல்ல முடியும். எதிர்கால நிலை குறித்து சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.

இதனையடுத்து மெரினா கடற்கரையில் பேனா சின்னம் அமைப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், பேனா சின்னம் அமைத்தால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும். சுற்றுச்சூழல் பாதிக்கும். கோட்டையில் ராபர்ட் கிளைவ் இருந்த அறையில், அம்மா ஆசீர்வாதத்தால் நான் அங்கு இருந்தேன். வக்கிர புத்தியுடன் பேனா சின்னம் அமைக்கப்படுகிறது. சனி, ஞாயிறன்று எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்திற்கு பொதுமக்கள் 100% வருகின்றனர். கருணாநிதி நினைவிடத்திற்கு அதில் கால் விழுக்காட்டினர் தான் வருகின்றனர்.

அதனை அதிகரிக்கவே நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது . இதற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் திமுகவின் கூட்டமாக நடைபெற்றது. கருணாநிதிக்கு அறிவாலயத்தில் நினைவுச்சின்னம் அமைத்தால் சரியாக இருக்கும். கடலில் அமைத்தால் கடுமையாக எதிர்ப்போம் என்று கூறியதை தொடர்ந்து, பாஜக வேட்பாளரை நிறுத்தினால், அதிமுக வேட்பாளர் திரும்பப்பெறப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய ஜெயக்குமார், நாங்கள் முன் வைத்த காலை, பின் வைக்க மாட்டோம் என தெரிவித்தார்.

ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக வேட்பாளரை அறிவித்தால், ஓபிஎஸ் அணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரை திரும்ப பெறுவோம் என ஓபிஎஸ் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முன்னாள் காதலனை கொலை செய்ய கூலிபடை ஏவிய +2 மாணவி!

எல்.ரேணுகாதேவி

அமிதாப் வீட்டுக்கு வாடகைக்கு சென்ற ஹீரோயின்: மாத வாடகை ரூ.10 லட்சமாம்!

EZHILARASAN D

திமுக கொண்டுவந்த ‘வாயில் தோறும் வள்ளுவம்’ திட்டத்தை, அதிமுக அரசு செயல்படுத்தவில்லை : மா.சுப்பிரமணியன்

Halley Karthik