தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

100 சதவீத கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து, பெற்றோர் தைரியமாக புகாரளிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள மாநகராட்சி, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை,…

100 சதவீத கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து, பெற்றோர் தைரியமாக புகாரளிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள மாநகராட்சி, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளை ஆய்வு செய்து வருவதாக கூறினார்.

மேலும், தனியார் பள்ளிகளிலிருந்து அதிக அளவு மாணவர்கள், தற்போது அரசு பள்ளிகளில் சேர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், தனியார் பள்ளிகளில் 100 சதவீதம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, நேரடியாக யாரும் புகார் தெரிவிப்பதில்லை என்றும், அவ்வாறு பெற்றோர் தைரியத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும், நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைக்கு பிறகு, மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும், என அமைச்சர் அன்பில் மகேஸ் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.