ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரண்டில் ஒன்று பார்ப்போம் என செங்கல்பட்டில் நடைபெற்ற கூட்டத்தில் டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம்
நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் அக்கட்சியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய டிடிவி தினகரன், எம்ஜிஆரை பற்றி குறை கூற திமுகவினரே யோசிப்பார்கள் என்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆட்சி அமைக்க உதவியவர் எம்.ஜி.ஆர் தான் என்றும் கூறினார். திமுகவினர் வார்த்தைக்கு வார்த்தை சமூக நீதி என்று சொன்னாலும், தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு 69 சதவீதமாக உயர்த்தப்பட்டது அதிமுக ஆட்சியில்தான் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் போடும் போட்டி டெல்லி வரை சென்று நிற்கிறது என்றார். எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் இன்று குண்டர்கள் கையிலும் டெண்டர் விடுபவர்கள் கையிலும் சிக்கி தவிக்கிறது என்று கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமியை ஒரு துரோகி என விமர்சித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் கொங்கு மண்டலத்தில் நடைபெற உள்ளதை சுட்டிக்காட்டிய டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இந்த தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் எனக் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் ஜெயலலிதாவின்
தொண்டர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டும் என கூறினார்.
ஒன்றிணைய வேண்டும் என ஜெயலலிதாவின் தொண்டர்களை பார்த்துதான் தாம் கூறுவதாகவும், டிடிவி தினகரன் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம் எனவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சூளுரைத்தார்.