காட்டுமன்னார்கோவில் அருகே நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் 102 வயதுடைய பாட்டி உற்சாகத்தோடு கும்மி பாட்டு பாடியது அனைவரும் வெகுவாக கவர்ந்தது.
தமிழர் திருநாளாம் பொங்கல்பண்டிகையையொட்டி தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் பொங்கல் வைத்தும், வாழ்த்துக்களை பறிமாறியும் வருகின்றனர். பொங்கலை முன்னிட்டு ஜல்லிகட்டு, சேவல் சண்டை, கபடிப் போன்ற போட்டிகள் கிராமந்தோரும் நடந்து வருகின்றன.
காட்டுமன்னார்கோவில் அருகே அறந்தாங்கி கிராமத்தில் பொங்கல்
பண்டிகை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா கிராமத்தினர் சார்பில்
கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியின் போது திடிரென 102 வயதுடைய கன்னி அம்மாள் என்ற பாட்டி கும்மி பாட்டு பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவரது பாடல்களால் கிராம மக்கள் ஆர்வத்தோடு கும்மி அடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
கன்னி அம்மாள் பாட்டியின் உற்சாகத்தை பார்த்து வியந்த சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் அனைவரின் முன்னிலையிலும் பாட்டியை வாழ்த்தினார்