அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 61 பேர்
காயமடைந்தனர். படுகாயமடைந்த சுமார் 17 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை
அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கி வெகுவிமர்சையாக
நடைபெற்று முடிந்தது. வாடிவாசல் வழியாக சீறிவந்த காளைகளை தீரத்துடன் மாடுபிடி வீரர்கள் அடக்கி வெற்றி பெற்றனர். காளைகளும் மாடுபிடி வீரர்களுக்கு சிக்காமல் நழுவி விளையாடி வெற்றிகளை குவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போட்டி தொடங்குவதற்கு முன்பாக மாடு பிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் இணைந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். போட்டி தொடங்கியதும் சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டினர். மொத்தம் 11 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. காளைகள் முட்டியதில் காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என சுமார் 61 பேர் காயமடைந்தனர்.
பனையூரைச் சேர்ந்த ஆறுமுகம், தத்தனேரியைச் சேர்ந்த விஷ்னு, ஐரவாதநல்லூரைச் சேர்ந்த தாஸ் மற்றும் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த காளை, வல்லநாதபுரத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் மற்றும் திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்கமல் என்ற காவலர் உள்பட சுமார் 17 பேர் படுகாயமடைந்த நிலையில் அவனியாபுரம் அரசு துவக்கப்பள்ளியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.,