விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக இன்று ஆளுநரை சந்திக்கிறார் இபிஎஸ்..!!

விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை நடத்த இபிஎஸ் தலைமையில் பேரணியாக சென்று ஆளுநரிடம் அதிமுகவினர் சந்தித்து மனு அளிக்க உள்ளனர். சென்னையில் கடந்த வாரம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில்,…

விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை நடத்த இபிஎஸ் தலைமையில் பேரணியாக சென்று ஆளுநரிடம் அதிமுகவினர் சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.

சென்னையில் கடந்த வாரம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்ந்த விஷச்சாராய உயிரிழப்புகள், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

மேலும், இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆளுநரை சந்திக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் பேரணியாக சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து மனு அளிக்கவுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.