மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு விருந்தளிக்கும் இபிஎஸ்!

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்தளிக்கிறார்.

தமிழ் நாட்டில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் அதிமுக – பாஜக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் பாமக (அன்புமணி ராமதாஸ் தரப்பு) இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையே, மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நேற்று தமிழகம் வருகை தந்தார். தொடர்ந்து, டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக நேற்று இணைந்தது. தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு காலை விருந்தளிக்கிறார். இந்த விருந்தில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த சந்திப்பின் போது கூட்டணியில் தொகுதி பங்கீடு உளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்படலாம் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.