முக்கியச் செய்திகள் தமிழகம்

லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டத்தை அரசு கைவிடவேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில், லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டத்தை திமுக அரசு கைவிடவேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட லாட்டரிச் சீட்டுத் திட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, தனியார்கள் அனுமதிக்கப்பட்டு சீரழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஒரு நம்பர் லாட்டரி உள்பட 50 வகையான லாட்டரிகள் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டதாகவும், இதனால், குதிரை ரேஸ், சீட்டாட்டம் போல, தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை சூதாட்டமாக மாறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த லாட்டரி சீட்டு மயக்கத்தால், அப்பாவி மக்கள் வாழ்க்கையையும், குடும்பத்தையும் இழந்ததாகவும், பலர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2003-ம் ஆண்டு, ஒரே கையெழுத்தின் மூலம் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா லாட்டரி சீட்டை ஒழித்ததாகவும், தற்போது, திமுக அரசு மீண்டும் லாட்டரி சீட்டை கொண்டு வர, திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் லாட்டரி ஏஜெண்டுகள் கொள்ளையடிக்கவும், ஆட்சியாளர்கள் ஆதாயம் அடையவும் கொண்டு வரப்படும் இந்த திட்டத்தை, திமுக அரசு கைவிட வேண்டும் என அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சமூக நீதி, பெண்ணுரிமை பற்றி பேசும் தகுதி பாஜகவிற்கு மட்டுமே உண்டு; பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கருத்து!

Saravana

எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆறுதல்

Halley Karthik

மக்களின் குரலை கேட்காத மத்திய அரசு: கே.எஸ். அழகிரி!