மகாராஷ்டிராவில் நிலச்சரிவால் உயிரிழந்த 52 பேரின் உடல்கள் மீட்பு: தேசிய பேரிடர் மேலாண்மை படை

கனமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நேரிட்ட நிலச்சரிவில் புதையுண்ட 52 பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்னைப் படை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில வரலாற்றில் கடந்த 40ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து…

கனமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நேரிட்ட நிலச்சரிவில் புதையுண்ட 52 பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்னைப் படை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநில வரலாற்றில் கடந்த 40ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் மலைப்பகுதி கிராமங்களில் நிலச்சரிவு நேரிட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மீட்பு பணிகள் குறித்து தேசிய பேரிடர் மீட்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“மழை, வெள்ள பாதிப்புகள் நேரிட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் 149 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து நடுவழியில் தவித்த 1,800 பேரை பேரிடர் மேலாண்மை படையினர் மீட்டுள்ளனர். வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 87 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு நேரிட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவு நேரிட்ட பகுதிகளில் 23ம் தேதி மாலை முதல் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இதுவரை நிலச்சரிவில் புதைந்திருந்த 52 பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளன. உயிரிழந்தோரில் 8 வயதுக்கு உட்பட்ட இரண்டு குழந்தைகளும் அடக்கம். மேலும் பலர் காணாமல் போய் உள்ளதால் நிலச்சரிவு பகுதியில் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் தொடர்ந்து தீவிர மீட்ப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கோல்ஹாபூரில் உள்ள வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட கிராமத்தினரை மீட்புப் படையினர் மீட்டனர்.

இவ்வாறு தேசிய பேரிடர் மீட்ப்புப்படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.