முக்கியச் செய்திகள் தமிழகம்

இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என அனைவரும் ஒன்றிணைவர்- வைத்திலிங்கம்

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற இபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் விரைவில ஒன்று சேர்வோம். ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன் முதல் சசிகலா, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் வரை அனைவரும் ஒன்று சேர்வோம். ஒன்னு சேர எடப்பாடி பழனிச்சாமி ஒத்துழைக்கவில்லை என்றால், எடப்பாடி தனித்து விடப்படுவார். அது கூடிய விரைவில் நடக்கும். எங்களுடைய பிரச்சனையில் பாஜக தலையீடு இல்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுகள் ஏற்கனவே வந்ததுதான். தற்போது புதிதாக ஒன்றும் வரவில்லை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு கட்சிக்கும் சம்பந்தம் கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் தேர்தலை சந்திக்கும் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருப்பார். 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்று கூறினார்.


மேலும், ஆறுமுகசாமி அறிக்கையில் ஒரு சில கருத்துக்கள் முரண்பாடாக உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களை விட சிறந்த மருத்துவர்கள் நமது நாட்டில் யாரும் கிடையாது. அவர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். ஆறுமுகம் சாமி அறிக்கை முற்றிலும் பொய் என்று நாங்கள் கூறவில்லை. அந்த அறிக்கை மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

கோவை மாவட்டத்தை நான்கு மாவட்டமாக அதிமுக ஓபிஎஸ் இணைத்துள்ளது அதன் அடிப்படையில் தான் கோவை செல்வராஜ் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் எதற்காக தன்னை கட்சியிலிருந்து விடுவித்துக் கொண்டார் என்பது எங்களுக்கு
தெரியவில்லை. மீண்டும் அவரை ஒன்றிணைப்பதற்கு பேச்சுவார்த்தை தொடரும்.

எடப்பாடி அணியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடந்தபட்ட சோதனை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர இதுவரை சார்ஜ் சீட் பதிவு செய்யப்படவில்லை. ஆளுநருக்கு என்று சட்ட திட்டம் என்ன உள்ளதோ, அதன்படி தான் ஆளுநர் நடந்து வருகிறார். அப்படித்தான் நடக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஓபிஎஸ் அணியின் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடக்கும் அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கரும்பு விவசாயம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது: அமைச்சர்

EZHILARASAN D

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு கொரோனா

EZHILARASAN D

நள்ளிரவில் முதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனால் பரபரப்பு!

Arivazhagan Chinnasamy