2026 தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் தோல்வியடைந்து எதிர்கட்சி அந்தஸ்தை இழந்தது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனை தொடர்ந்து அவர் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி இன்று தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கான காரணம் மற்றும் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.




