தே.ஜ.கூட்டணி எம்.பி.களின் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்…!

தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) எம்.பி.களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது

நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் மக்களவையில் மறைந்த 7 முன்னாள் எம்.பி.களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நீட் வினாத்தாள் கசிவு, ராமர் கோயில் காணிக்கை திருட்டு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரி எதிர்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நேற்று இரு அவைகளும் 6 முறை ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) நாடாளுமன்றக் குழுவின் வாராந்திர உத்திசார் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டம் தற்போது ‘மங்கள் மிலன்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் புதிதாக பதவியேற்றுள்ள எம்.பி.களை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.

இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக மிக நீண்ட காலம் பதவி வகிக்கும் மோடியைப் பாராட்டும் வகையில், இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகள் ஒரு பாராட்டுத் தீர்மானத்தையும் நிறைவேற்றவுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.