இரண்டாவது நாளாக எதிர்கட்சிகள் அமளி : மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு…!

எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக சபாநாயகர் ஓம். பிர்லா மக்களவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்துள்ளார்.

நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே நீட் வினாத்தாள் கசிவு, ராமர் கோயில் காணிக்கை திருட்டு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரி எதிர்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நேற்று இரு அவைகளும் 6 முறை ஒத்திவைக்கப்பட்டன

இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரின் இரண்டாவது நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மக்களவை தொடங்கிய உடனே மேகதாது அணை விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பச்சை துண்டு உடுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

அதே போல நேற்று சிஜேபி போராட்டத்தின் போது மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தொடர் அமளி காரணமாக சபாநாயகர் ஓம். பிர்லா மக்களவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.