நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவின் எதிரே அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவ பொம்மையை எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் எனத் தொண்டர்கள் கோரிக்கை வைத்த நிலையில் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி நடைபெறுகிறது. ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் என்று கட்சியில் இரு அணிகளாக அதிமுகவினர் பிரிந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், பதவிக்காலமும் நேற்றைய தினத்துடன் முடிவடைந்துள்ளது. இதனால் அதிமுகவில் உள்ள மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் கீழ் கட்சி இயங்க வேண்டுமெனத் தெரிவித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் திருச்சி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓ. பன்னீர் செல்வத்தின் புகைப்படம் பெயர்கள் சுவர் விளம்பரங்கள், தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கட்டைகளில் எழுதப்பட்ட ஓ.பி.எஸ் பெயர்களை விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகத்தின் வாய் மொழி உத்தரவின் பேரில் இன்று பெயிண்ட் அடித்து அதிமுகவினர் அழித்தனர். மேலும் அதிமுகவில் ஓ. பன்னீர் செல்வத்தின் புகைப்படமும் பெயரும், விழுப்புரம் மாவட்டத்தில் தொண்டர்கள் அகற்றி வருவது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைச் செய்தி: ‘’தடுப்பணைகளை அரசு சும்மா கட்டுவதில்லை…’ – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை’
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், வேதாரணியம் ராஜாஜி பூங்கா எதிரே அதிமுகவினர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மையை எரித்தனர். இதில், முன்னாள் நகரத் துணை செயலாளர் வீரராசு நகர அதிமுக தகவல் தொழில் நுட்ப அணித் தலைவர் கரணி சதீஷ், ஓபிஎஸ்-க்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி உருவபொம்மையை எரித்து, எடப்பாடி பழனிச்சாமி ஒழிக, ஓபிஎஸ் வாழ்க என்று கோஷங்கள் எழுப்பினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.