ஆதரவாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என ஒருதரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டசபைத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி…

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என ஒருதரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

சட்டசபைத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்விக்குப்பிறகு அதிமுகவில் சசிகலா, தினகரன் இணைப்பு குறித்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. இரட்டை தலைமையிலான அதிமுக இன்னும் தேயும் என்பதை உணர்ந்த சில அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் எனக்கோரியும் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளார்.

இதே கருத்தை கோவை முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உள்ளிட்டோரும் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என அதிமுகவின் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் செம்மலை, இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.