முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: பேட்டிங்கை தேர்வு செய்தது நியூசிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டாம் லாதமும் தேவோன் கான்வேயும் களமிறங்கி ஆடி வருகின்றனர். நியூசிலாந்து அணியில், அனுபவமிக்க ராஸ் டெய்லர், கேப்டன் கேன் வில்லியம்சன், ஹென்றி நிகோல்ஸ், விக்கெட் கீப்பர் பிஜே வாட்லிங் ஆகியோர் பேட்டிங்கில் அசத்தி வருகின்றனர். ஆல்ரவுண்டர் கிராண்ஹோம், பந்துவீச்சாளர்கள் நீல் வாக்னர், டிம் சவுதி, மைக்கேல் சண்ட்னர், கைல் ஜாமிசன் உள்ளிட்டோர் வலுவாக உள்ளனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் முன்னணி வீரர்களான, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ, சாம் கர்ரன், மொயின் அலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதால், அந்த அணி கொஞ்சம் பலவீனமாகவே இருக்கிறது. பேட்டிங்கில் கேப்டன் ஜோ ரூட், ஜாக் கிராவ்லி, டோம் சிப்லி ஆகியோர் அந்த அணி நம்பி இருக்கிறது. பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன், துணை கேப்டன் ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன் மார்க்வுட் ஆகியோர் வலுவாக இருக்கின்றனர். இங்கிலாந்து சொந்த மண்ணில் விளையாடுவதால், எளிதாக நியூசிலாந்தை எதிர்கொள்ளும் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.

இரு அணிகளும் டெஸ்ட்டில் 105 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இங்கிலாந்து 48 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வரும் 18 ஆம் தேதி பங்கேற்க இருக்கிறது. அதற்கான பயிற்சியாக இந்த டெஸ்ட் போட்டி நியூசிலாந்து அணிக்கு அமையும்.

Advertisement:

Related posts

“என் வெற்றியை விட மயிலாப்பூர் திமுக வேட்பாளர் வெற்றி முக்கியம்” – உதயநிதி

Gayathri Venkatesan

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே 2 ஆம் கட்ட நிவாரண நிதி: கார்த்தி சிதம்பரம் யோசனை

Karthick

புதிய போர்விமான உற்பத்தி தொழிற்சாலையைத் திறந்து வைத்தார் ராஜ்நாத் சிங்

Jayapriya