முக்கியச் செய்திகள் குற்றம்

மும்பையில் ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த பெண் கைது!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தாகிசர் பகுதியில் ஷாஹீத் ஷேக் என்பவர் தனது மனைவி ரஷீதா ஷேக் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த மே 21ம் தேதி வேலைக்கு சென்ற தனது கணவர் ஷாஹீத் வீடு திரும்பவில்லை என ரஷீதா ஷேக் போலீசிடம் புகாரளித்துள்ளார். இதையடுத்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை துவக்கினர்.

விசாரணை முடிவில், ரஷீதா ஷேக் தனது ஆண் நண்பருடன் இணைந்து கணவர் ஷாஹீத் ஷேக்கை கொலை செய்ததும் அவர்களது வீட்டின் சமையலறையில் புதைத்து வைத்திருப்பதும் தெரிய வந்தது. முன்னதாக, தனது தாய் அவரது ஆண் நண்பருடன் சேர்ந்து தந்தையை கொலை செய்ததை அவர்களது மகள் பார்த்துள்ளார். அடுத்த சில நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்த அவரது மாமாவிடம் அழுதபடியே தந்தையை தாய் கொலை செய்தது குறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த தகவலின் பேரில் போலீசார் வீட்டிற்கு சென்று சமையலறையில் புதைக்கப்பட்டிருந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ரஷீதா ஷேக்கை கைது செய்ததுடன் அவரது ஆண் நண்பரை தேடி வருகின்றனர்.

Advertisement:

Related posts

சோனு சூட்டை கௌரவப்படுத்திய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்.

Karthick

முன்னணி நடிகர் நடிகைகள் வாக்களித்தனர்!

Gayathri Venkatesan

கொரோனா சிகிச்சை உபகரணங்கள் இறக்குமதிக்கான வரிவிலக்கு நீட்டிப்பு!

Saravana Kumar