தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு…

வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர், புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் இன்று பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, திருச்சி, கரூர், தருமபுரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகபட்சமாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கக் கூடும் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.