அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை!

தமிழக  ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமியின் வீடு மற்றும் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக  ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமியின் திண்டுக்கல் துரைராஜ் நகரில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் சென்னை உள்ள கிரீம்ஸ் ரோடு சாலையில் உள்ள அவரது வீட்டிலும், சட்டமன்ற உறுப்பினர் விடுதியிலும் இன்று காலை முதல் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்பட அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகார்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அத்துடன், திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள பழனி சட்டமன்ற உறுப்பினரும்  ஐ பி செந்தில்குமார் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகார்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும்  அமைச்சர் ஐ பெரியசாமியின் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள்  வீட்டில் சோதனையிலும் தொடர்சியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.