தமிழ் திரையுலகில் 1980ல் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அருணா. இவர் இயக்குநர் பாரதிராஜாவின் ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தின் முதல் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து கரிமேடு கருவாயன், முதல் மரியாதை உள்பட பல திரைப்படங்களில் அருணா நடித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர், கேசினோ ட்ரைவ் பகுதியில் அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நடிகை அருணாவின் கணவர் மோகன் குப்தா, வீடுகளில் உள் கட்டமைப்பு அலங்காரப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதனால் நான்கு பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 7 மணியில் இருந்து மோகன் குப்தா வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.







