முக்கியச் செய்திகள் உலகம்

இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்ட எமர்ஜென்சி

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், அத்யாசியப் உணவுப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் அதிபருக்கு எதிராக மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி, நேற்று முன்தினம் அவரது இல்லத்தை முற்றுகையிட்டு மக்கள் எழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களின் எழுச்சி போராட்டம் தீவிரமடைந்து வருவதை உணர்ந்த இலங்கை அதிபர் கோத்பய ராஜபக்சே, அவசர நிலை பிரகடனத்தை நேற்றிரவு அறிவித்தார்.

இலங்கையில் தற்போதைய அரசியல் கட்டமைப்பின் வீழ்ச்சியே, மக்களின் போராட்டத்திற்கு காரணம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை மக்களை வாட்டும் பிரச்னைகளுக்கு தீர்வை காண்பதற்கு அரசு தவறியுள்ளதாக கூறிய அவர், எதிர்க்கட்சியும் தனது பொறுப்பை நிறைவேற்ற தவறியுள்ளதாக விமர்சனம் செய்துள்ளார். இலங்கை அரசாங்கம் இனவாத கருத்துக்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், அதேவேளையில் யார் இந்த வன்முறைக்கு காரணம் என்பதையும் அரசு வெளிப்படுத்திட வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Gayathri Venkatesan

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு!

Halley Karthik

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி – முதலமைச்சர்

Arivazhagan CM