மின்சார வாகன பயன்பாடு ஊக்குவிக்கப்படும் – பட்ஜெட் உரையில் அறிவிப்பு!

மின்சார வாகன உற்பத்தி மேம்படுத்தப்படும் என்று பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில்,  அதற்கான தேதி மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட…

மின்சார வாகன உற்பத்தி மேம்படுத்தப்படும் என்று பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில்,  அதற்கான தேதி மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.  இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத்  தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில்,  நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.  நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.  இதையடுத்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் உரையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசிக்கத் தொடங்கினார்.  பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் மக்கள் மின்சார வாகனங்களை உபயோகப்படுத்த தொடங்கிய நிலையில்,  மின்சார வாகன உற்பத்தி குறித்த அறிவிப்பை இடைக்கால பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரவித்துள்ளார்.

இது குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில்,  மின்சார வாகன உற்பத்தி மற்றும் சார்ஜிங் மையங்கள் ஊக்குவிக்கப்படும் என தெரிவித்துள்ளர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.