முக்கியச் செய்திகள் தேர்தல் 2021

தேர்தல் பணியில் தமிழ்நாடு போலீஸை ஈடுபடுத்தக் கூடாது: எடப்பாடி பழனிசாமி

தேர்தல் பாதுகாப்பு பணியில் தமிழ்நாடு போலீஸ் ஈடுபடக்கூடாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. அதிமுக சார்பில் 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். விருப்ப மனு தாக்கலும் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. அதில், மாநில காவல்துறையினர் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படலாம். ஆகவே, உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் மாநில போலீஸை ஈடுபடுத்தக் கூடாது. சிஆர்பிஎஃப் அல்லது சிஐஎஸ்எஃப் போலீஸை ஈடுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டும் எனவும். வாக்குப் பதிவு மையங்களில் சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய பழனிசாமி, தேர்தலில் சமூக விரோதிகளின் செயல்பாட்டை முற்றிலும் தடுக்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்து வாக்குகள் எண்ணப்படும் வரை வாக்குச்சீட்டுகள் பாதுகாப்புக்கு CISF வீரர்களை பணியமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு!

Jeba Arul Robinson

தாயை வெட்டிக் கொன்ற மனநலம் பாதித்த மகனுக்கு வலைவீச்சு!

Gayathri Venkatesan

கொரோனா எதிரொலியாக தஞ்சை பெரிய கோயில் மூடல்!

Gayathri Venkatesan