ஈரோட்டில் 4 தலைமுறை குடும்பத்தினருடன் 100-வது பிறந்த நாளை கொண்டாடிய முதியவர்!

ஈரோட்டில் முதியவர் ஒருவர் 4 தலைமுறை குடும்பத்தினருடன் சேர்ந்து 100-வது பிறந்த நாளை கொண்டாடினார். ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் குமரகுரு என்பவர் தனது மனைவி லட்சுமியம்மாளுடன் வசித்து வருகிறார்.  குமரகுருவிற்கு இன்று 100-வது பிறந்த…

ஈரோட்டில் முதியவர் ஒருவர் 4 தலைமுறை குடும்பத்தினருடன் சேர்ந்து 100-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் குமரகுரு என்பவர் தனது மனைவி லட்சுமியம்மாளுடன்
வசித்து வருகிறார்.  குமரகுருவிற்கு இன்று 100-வது பிறந்த தினம்.  அதனை கொண்டாட
பேரன்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.  இதில் 4 தலைமுறை குடும்பத்தினருடன்
ஒன்று கூடினர்.   அனைவரும் கேக் வெட்டி குமரகுருவின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதையும் படியுங்கள்:  செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் வழக்கம் போல் இயங்கும் – மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்

முன்னதாக அனைவரும் புத்தாடைகள் அணிந்து,  இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.  பின்னர் குமரகுரு,  லட்சுமியம்மாள் தம்பதியினரின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றனர்.  பல ஆண்டுகள் கழித்து குடும்பத்தினர் ஒன்றுகூடியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அனைவரும் தெரிவித்திருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.