கட்டுரைகள் சினிமா

அசால்ட் சேதுவின் அடுத்த அவதாரம் – ஜிகர்தண்டா 2 வருகிறதா?


சுஷ்மா சுரேஷ்

கட்டுரையாளர்

தமிழ் சினிமா வரலாற்றில் 2012 முதல் 2015 வரை ஒரு பொற்காலம் எனவே சொல்லலாம். இந்த காலகட்டங்களில் குறும்படங்கள் மூலமாகவும், உதவி இயக்குநர்களாகவும் இருந்து ஒரு பெரும் பட்டாளம் இயக்குநராக தமிழ் சினிமாவிற்குள் படையெடுத்து படமெடுத்தது.

பீட்சா, அட்டகத்தி, சூது கவ்வும், நேரம், மூடர் கூடம் என பல வித்தியாசமான ஜானர்களில் புகுந்து விளையாடி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விதவிதமாக விஷுவல் விருந்து வைத்தனர். அதுவரை இருந்து வந்த பல்வேறு க்ளிஷேக்களை சுக்குநூறாக உடைத்ததோடு பர்ச்சார்த்த பல முயற்சியை நுணுக்கமாக கையாண்டு அதில் வெற்றியும் பெற்றனர். இந்த கலைஞர்களின் கலைகளின் வெற்றியை பார்த்து இன்ஸ்பைர் ஆகிய பலரும் இதேபோன்றதொரு கலைப்படைப்பை கொடுக்க வேண்டும் என்ற கனவுகளோடு சினிமாவுக்குள் நுழைந்தனர். அப்படி நடந்த சிறப்பான பல சம்பவங்களில் மிக தரமான ஒரு சம்பவம் தான் ஜிகர்தாண்டா.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு இதே நாளில் இப்படம் வெளியானது.படத்தின் நாயகன் சித்தார்த் என்று சொல்லப்பட்ட நிலையில் தியேட்டருக்குள் நுழைந்தவர்களையெல்லாம் மிரட்டி உலுக்கியதோடு வயிறு குலுங்க சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து அனுப்பினார் அசால்ட் சேது. இப்படத்தில் அசால்ட் சேது ஒரு வசனம் பேசுவார், ‘இது நம்ம படம்டா’ என்று.. அதற்கேற்றார் போல் இது அசால்ட் சேதுவின் படமாகவே மாறிப்போனது.

கேங்ஸ் ஸ்டர் படங்கள் எடுக்க வேண்டுமென்றால் மதுரைக்கு போவது தமிழ் சினிமா இயக்குநர்களின் வழக்கம். மதுரையில் அமைந்திருக்கும் இடங்கள், மதுரை மக்களின் அழுத்தமான பேச்சுகள் அனைவருக்கும் பிடிக்கும் என்பதால் பல நிகழ்ச்சிகள், படங்கள் மதுரையில் நடைபெறும். அதுபோல மதுரையை மையமாக வைத்து இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் மிக அற்புதமாக இயக்கிருப்பார். இப்படம் வெளியாகி 8 வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது வெளியிட்டாலும் தற்கால படங்களின் கேங்ஸ்டர் படங்களைவிட திரைக்கதை வடிவிலும், மேக்கிங் ஸ்டைலிலும் பல மடங்கு இப்படம் உயர்ந்தே நிற்கும்.

மதுரையில் உள்ள பிரபல ரவுடி “அசால்ட்“ சேது என்பவரின் வாழ்க்கையை அவருக்குத் தெரியாமலே அறிந்துகொண்டு, அந்தக் கதையை படமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார் இயக்குநர் கார்த்திக். இதை அறிந்து கொண்டு இயக்குநரிடம் தனது கதையை தானே முன்வந்து கூறும் சேது, ஒரு கட்டத்தில் சேதுவிற்கு(பாபி சிம்ஹா) நடிப்பு மீது ஆசை வருகிறது. அப்படத்தில் சேதுவாகவே நடிக்கிறார் அசால்ட் சேது. இதனைத்தொடர்ந்து நடக்கும் ரகளைகளும் பல திருப்பங்களும் இப்படத்தை தமிழ் சினிமாவின் கல்ட்’களில் ஒன்றாக மாற்றியது. ‘சமுதாயத்துல நடக்குற வன்முறைய எதிர்த்து உலக அமைதிய வலியுறுத்தி ஸ்ட்ராங்-ஆ ஒரு மெசேஜ் செல்லப்போறேன் சார்’ என கார்த்திக் தயாரிப்பாளர் ஒருவரிடம் படத்தின் ஆரம்பத்தில் சொல்லுவார். ‘என்னால சமுதாயத்தை திறுத்தலாம் படம் எடுக்க முடியாது’ என்று தயாரிப்பாளர் சொல்லுவார். ஆனால் இப்படமே வன்முறையை எதிர்த்து ஸ்ட்ராங்காக ஒரு மெசேஜ் சொல்லும் வகையில்தான் உருவாக்கியிருப்பார் கார்த்திக் சுப்பாராஜ்.

பொதுவாக தமிழ் சினிமாவில் டான் என்றால் BGM போட்டு, கூலர்ஸ் போட்டுக்கொண்டு ஸ்டைலாக வருவார்கள் அல்லது கோப-முகத்தை மட்டுமே காட்டுவார்கள். ஆனால் இப்படத்தில் டானை முதல் பாதியில் ஈவு இரக்கமற்ற கொடூரனாகவும் இரண்டாம் பாதியில் காமெடியாகவும் காண்பித்திருப்பார்கள். இரண்டாம் பாதியில் அவர் செய்யும் அனைத்து செயல்களும் சீரியஸாக இருந்தாலும், பார்க்கும் ஆடியன்ஸை சிரிப்பூட்டும் வகையிலேயே அமைந்திருந்தது. பாபி சிம்ஹா எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் இப்படம் அவருக்கு Icon என்று சொல்லலாம்.

இப்படத்தில், சித்தார்த், லட்சுமி மேனன் என பலர் நடித்திருந்தாலும் அனைவரையும் அசால்டாக ஓவர் டேக் செய்திருப்பார் அசால் சேது. அவரின் காதப்பாத்திரத்தையே அவ்வளவு வலுவாகவும் நுணுக்கமாகவும் வடிவமைத்திருப்பார் கார்த்திக் சுப்பாராஜ். சூப்பர் ஸ்டார் ரஜினியை மைண்டில் வைத்துதான் இந்த கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் எங்கோ சொல்ல, பின் ஒருநாள் ரஜினியை நேரில் சந்திக்கும்போது, ‘எண்டையே இந்த படம் சொல்லிருக்கலாமே’ என ரஜினியே விரும்பி கேட்டதாக பகிர்ந்திருப்பார் கார்த்திக் சுப்புராஜ்.

இத்திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹாவும், சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய விருதை விவேக் ஹர்சனும் பெற்றார். இப்படி பல விருதுகளை குவித்த இப்படம் இன்று வரை பேசுப் பொருளாக தான் உள்ளது. இப்படி வெளியாகி 8 ஆண்டுகள் கடந்த சூழலில், படத்தின் 2ம் பாகத்தை இயக்கவுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு அழகான வீடியோ எடிட்டின் மூலம் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது! அசால் சேதுவின் அடுத்த அவதாரத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர் தமிழ் சினிமா ரசிகர்கள்..!

– சுஷ்மா சுரேஷ் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாலிவுட் படத்தில் ஷாருக்கான் ஜோடியாகிறாரா நயன்தாரா?

EZHILARASAN D

சுல்தான் பட டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

G SaravanaKumar

மூச்சுத் திணறல்: நடிகர் திலீப் குமாருக்கு தீவிர சிகிச்சை

EZHILARASAN D