நுகர்வு அதிகரிப்பு: முட்டை விலை திடீர் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் ஒரே நாளில் 25 காசுகள் உயர்த்தி முட்டை விலை ரூ.4.20 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முட்டை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது நாமக்கல் மாவட்டம். இங்கு நாள் ஒன்றுக்கு 4…

நாமக்கல் மண்டலத்தில் ஒரே நாளில் 25 காசுகள் உயர்த்தி முட்டை விலை ரூ.4.20 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் முட்டை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது நாமக்கல் மாவட்டம். இங்கு நாள் ஒன்றுக்கு 4 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங் கிணைப்புக் குழு நிர்ணயிக்கும் விலைக்கு, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரி கள் முட்டையைக் கொள்முதல் செய்கின்றனர்.

தற்போது நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடை பெற்றது. இதில் முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. அப்போது முட்டை விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு ரூபாய் வரை, முட்டை விலை குறைந்த நிலையில், 25 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 4.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜ் கூறும்போது, ‘முட்டையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் நுகர்வு அதிகரித்து வருகிறது. தேவை அதிகரிப்பதால் வரும் நாட்களில் முட்டை விலை உயர வாய்ப்பிருக்கிறது. வடமாநிலங்களுக்கு முட்டையின் தேவை அதிகரிப்பால் அங்கு முட்டைகள் அனுப்பப்பட்டு வருகிறது. தீவின பொருட்களின் விலை இருமடங்கு உயர்வால் முட்டை விலை ரூ.5 க்கு மேல் இருந்தால் மட்டுமே கட்டுபடியாகும் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.