முட்டை வில்கை உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

நாமக்கல்லில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்துள்ளது.

நாமக்கல்லில் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் இருந்து கோடிக்கணக்கான முட்டைகல் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டகள் தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

நாமக்கல் முட்டை கொள்முதல் விலையை முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் தினந்தோறும் கூடி முடிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று முட்டை விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 10 காசுகள் உயர்ந்து ரூ.5.60 ஆக முட்டை விலை நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

சென்னையில் ஒரு முட்டையின் விலை ரூ.6.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.