மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் பிரபல கல்லூரிகளின் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட “கல்வி கண்காட்சி” கோவையில் இன்று தொடங்குகிறது.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியானது கோவை கொடிசியா அரங்கில் பிரம்மாண்ட கல்வி கண்காட்சியை இன்றும் நாளையும் (ஜூன் 18,19). இந்த கல்விக் கண்காட்சியில் தமிழ்நாட்டில் உள்ள சிறந்த கல்வியாளர்கள், சிறந்த ஆலோசகர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் உயர்கல்விக்கான ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.
மாணவர்கள் எந்தப் படிப்பை தேர்ந்தெடுக்கலாம், எந்த கல்லூரியை தேர்ந்தெடுக்கலாம் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் உடனடியாக கல்லூரியில் சேரவும் வங்கிகளில் கல்விக் கடன் பெறும் வசதியையும் கண்காட்சி ஏற்படுத்தி தருகிறது.
மாணவர்கள் இலவசமாக கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில் பங்கேற்க இதுவரை 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 7708210962 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த கண்காட்சியில் மாணவர்களின் வசதிக்காக 40க்கும் மேற்பட்ட தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வங்கிக் கடன் குறித்த சந்தேகங்களுக்காகவும் தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக, பிரத்யேக மேடை அமைக்கப்பட்டுள்ளது.









