தாயின் 100-வது பிறந்த நாள் – உருக்கமாக பதிவிட்டுள்ள பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹிராபாவுக்கு இன்று 100-வது பிறந்த நாளையொட்டி அவரிடம் காலில் விழுந்து மோடி ஆசிர்வாதம் வாங்கினார்.   இந்தியாவின் பிரதமராக உள்ள நரேந்திர மோடியின் தாய் ஹிராபா இன்று தனது…

பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹிராபாவுக்கு இன்று 100-வது பிறந்த நாளையொட்டி அவரிடம் காலில் விழுந்து மோடி ஆசிர்வாதம் வாங்கினார்.

 

இந்தியாவின் பிரதமராக உள்ள நரேந்திர மோடியின் தாய் ஹிராபா இன்று தனது 100-வது பிறந்த நாளை கொண்டாடினார். 1923ஆம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி ஹிராபா பிறந்தார். அவர் குஜராத்தில் உள்ள மோடியின் இளை சகோதரரான பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்து வருகிறார்.

 

தாயின் பிறந்தநாளையொட்டி, ஒரு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் சென்றார். பின்னர் அங்கு தாயை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கினார். பிரதமராக இருந்தாலும் தாய்க்கு பிள்ளை என்பதை மறவாத அவர் தாயின் கால்களை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து சேவை செய்தார். தாயின் பிறந்த நாளை கொண்டாடிய பிறகு பிரதமர் மோடி பாவகத் கோயிலுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதுடன், வதோதராவில் பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றவுள்ளார்.

மேலும் மோடியின் குடும்பம் அகமதாபாத்தில் உள்ள ஜகந்நாத் கோயிலில் இன்று அன்னதானம் வழங்குகின்றனர். வட்நகர் பகுதியில் உள்ள ஹட்கேஷ்வர் மகாதேவ் கோயிலில் பிரதமரின் தாய் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்காக பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

 

இதனிடையே, குஜராத் மாநிலத்தின் தலைநகர் காந்தி நகர் மாவட்டத்தில் உள்ள ரய்சான் பகுதியில் அமைந்திருக்கும் 80 மீட்டர் சாலைக்கு பூஜ்ய ஹிராபா மார்க் என்று மோடியின் தாயார் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வரும் தலைமுறையினர் அவரது வாழ்க்கையில் இருந்து ஊக்கம் பெற வேண்டும் என என்பதற்காக மோடியின் தாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் குஜராத் சென்றிருந்த மோடி தாயை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கிய நிலையில், தற்போது அவரது 100-வது பிறந்த நாளில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

 

தாயின் 100-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி உருக்காமான நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவர் எழுதி வெளியிட்டுள்ள பதிவில், தன்தந்தை உயிருடன் இருந்திருந்தால், அவரும் கடந்த வாரம் தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார். 2022 ஆம் ஆண்டு எனது தாயாரின் நூற்றாண்டு தொடங்கும் ஒரு சிறப்பு ஆண்டு என குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த வாரம், தன் மருமகன் காந்திநகரில் இருந்து அம்மாவின் சில வீடியோக்களை பகிர்ந்துள்ளதாக பதிவிட்டுள்ள மோடி, சமுதாயத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர், என் தந்தையின் புகைப்படம் ஒரு நாற்காலியில் வைக்கப்பட்டிருந்தது, அம்மா மஞ்சீரா வாசித்துக்கொண்டு பஜனைப் பாடுவதில் மூழ்கியிருந்தார். என் தாய் இன்னும் அப்படியே இருக்கிறாள். வயது உடல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் அவள் எப்போதும் போல மனதளவில் விழிப்புடன் இருக்கிறாள் என்று பிரதமர் மோடி எழுதியுள்ளார்.

 

எனது வாழ்க்கையில் நல்லவை, என் குணத்தில் நல்லவை அனைத்தும் என் பெற்றோருக்குக் காரணமாக இருக்கலாம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இன்று, நான் டெல்லியில் அமர்ந்திருக்கும்போது, ​​கடந்த கால நினைவுகளால் நிரம்பியிருக்கிறேன்” என்று பிரதமர் மோடி நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

 

வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க அம்மா சில வீடுகளில் பாத்திரங்களைக் கழுவி வந்தார். எங்களின் சொற்ப வருமானத்திற்கு துணையாக சர்க்காவை சுற்றவும் அவள் நேரம் ஒதுக்குவாள். பருத்தி உரிப்பது முதல் நூல் நூற்பு வரை அனைத்தையும் செய்வாள். இந்த முதுகு உடைக்கும் வேலையில் கூட, பருத்தி முட்கள் எங்களை குத்தாமல் இருப்பதை உறுதி செய்வதே அவரது முதன்மையான அக்கறை,” என்று பிரதமர் மோடி தனது பதிவில் உருக்கமாக நினைவுகளை குறிப்பிட்டுள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.