கரூர், நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கரூர் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

2026 சட்டமன்ற தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற அதிமுக எதிர்கட்சி அந்தஸ்தை இழந்தது. இதனால் அக்கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்தது. பின்னர் சமாதானமாகி அணிகள் இணைந்தன. இருப்பினும் முன்னாள் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்பட 6 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இதனை தொடர்ந்து கட்சியை பலப்படுத்தும் பணிகளில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை அவர் சந்தித்து வருகிறார். அந்த வகையில் இன்று எடப்பாடி பழனிசாமி கரூர் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில் சட்டமன்றத் தேர்தலின் தோல்வி குறித்து ஒவ்வொரு தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார். மேலும் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து இடைத்தேர்தலை சந்திப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.