நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் எற்பட்ட குளறுபடிகளுக்கு பொருப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி காக்ரோச் ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பருவநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 20 நாட்களாக உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்தநிலையில் இன்று டெல்லி போலீசார அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதற்கு பலவேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக்-ஐ ஜந்தர் மந்தரில் இருந்து அகற்றியது தவறு. மோடி அரசின் அடிப்படை கொள்கையே பொய் மற்றும் வன்முறைதான் எந்தவிதமான அடக்குமுறையும் இந்திய மாணவர்களையும், அவர்களை நேசித்து அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களையும் தடுக்க முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.




