ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்னும் சுற்றுவட்ட ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் முதல் தனியார் சுற்று வட்ட ராட்கெட்டான இது மிஷன் ஆகமன் எனப் பெயரிடப்பட்டுள்ள ஏவுதல் திட்டம் மூலம், ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் (SDSC-SHAR) முதல் ஏவுதளத்திலிருந்து இன்று காலை 11:30 மணிக்கு விண்ணில் பாய இருந்தது.
இந்த நிலையில் கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கவுண்டவுன் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தொழில் நுட்பக் கோளாறு சரி செய்யப்படு மதியம் 12:06-க்கு விக்ரம்-1 ராக்கெட் வெற்றி கடமாக விண்ணில் பாய்ந்தது. இது நாட்டின் விண்வெளிச் சூழலமைப்பிற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகவும் விளங்குகிறது
இந்த நிலையில், விகரம்-1 ராக்கெட் விண்ணில் பாய்ந்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததற்காக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தேன். இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு இது திருப்புமுனையான தருணம். நமது தனியார் துறையின் அதிகரித்து வரும் பங்களிப்பு, புதிய எல்லைகளைத் திறந்து, புத்தாக்கத்தை வேகப்படுத்துகிறது. இந்த சாதனை ஏராளமான இளைஞர்கள் பெரிய கனவுகளை காணவும், துணிச்சலுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடவும் ஊக்கமளிக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.




