செய்திகள்

எடப்பாடி தொகுதியில் பழனிசாமி அபார வெற்றி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இன்று அதன் வாக்குகள் எண்ணப்பட்டன. எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி 1,50,295 வாக்குகள் பெற்று அபார வெற்றிப்பெற்றார். இவரை எதிர்த்துப்போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத் குமார் 67.823 வாக்குக்களை பெற்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றிபெற்றார். இந்நிலையில் தற்போது வெற்றிபெற்றதன் மூலம், அவர் மூன்றாவது முறையாக வெற்றியை தன்வசமாக்கி உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாட்கள் பயணமாக தமிழகம் வருகை

Halley Karthik

போதையற்ற சமுதாயத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு உள்ளது -அன்பில் மகேஸ்

Web Editor

ராணிப்பேட்டையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்..! மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்..

Web Editor