முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

`திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப எம்ஜிஆர் பிறந்தநாளில் வீர சபதம் ஏற்போம்’ – எடப்பாடி பழனிசாமி

திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப எம்ஜிஆர் பிறந்தநாளில் வீர சபதம் ஏற்போம் என எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி மடல் எழுதியுள்ளார்.

அந்த மடலில் கூறியிருப்பதாவது:  1972-ம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசிக்கு ஏற்றவாறு பஞ்சப்படி கொடுக்கப்படும் என்று அரசாணையை வெளியிட்டது. அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த தீயசக்தியான கருணாநிதி இதை மாநில அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த மறுத்தார். பிறகு ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் மாநில அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமான பஞ்சப்படி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய கொடுக்கும் பொருட்டு ஊதிய குழு ஒன்றை அமைத்து அதை அமல்படுத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்றைய திமுக ஸ்டாலின் அரசு தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டு மக்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு மக்களை ஏமாற்றி கூட்டணி கட்சிகளின் தயவால் ஆட்சிக்கு வந்தது.

இன்றைய நிர்வாக திறனற்ற ஆட்சி நடத்தி வரும் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் என்று ஆளாளுக்கு தமிழக அரசை கூறு போட்டுக்கொண்டு விடியா அரசை நடத்துக்கின்றனர். எனவே இந்த மக்கள் விரோத இந்த விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப எம்ஜிஆர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் வீரசபதம் ஏற்று களப்பணி ஆற்றி மீண்டும் நல்லாட்சியை மக்களுக்கு வழங்கிடுவோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது மடலில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு!

Jayasheeba

எம்.ஜி.ஆர் புகழ் எந்நாளும் நிலைத்திருக்கும்: வி.கே.சசிகலா

EZHILARASAN D

ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை

Web Editor