நேபாள விமான ​​விபத்தில் பலியான பயணி ஒருவர் பேஸ்புக் லைவில் பதிவான பயணிகளின் கடைசி நொடிகள்

நேபாள விமான விபத்தின் போது, ​​விபத்தில் பலியான பயணி ஒருவர் பேஸ்புக் லைவ் செய்து கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும்…

நேபாள விமான விபத்தின் போது, ​​விபத்தில் பலியான பயணி ஒருவர் பேஸ்புக் லைவ்
செய்து கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 5 இந்தியர்கள் உள்பட 68 பேர் உயிரிழந்தனர்.தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக எழுந்த தொழில்நுட்ப கோளாறுகளால் பயணிகள் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது என்றும், அங்கு நிலவிய காலநிலையும் விமான விபத்துக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

இந்த விபத்தில் பலியானவர்களில் 5 இந்தியர்கள் உட்பட 68 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.இந்த நிலையில்​​ விபத்தில் பலியான பயணி ஒருவர் பேஸ்புக் லைவ் செய்து கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, உத்திரபிரதேசத்தில் உள்ள காஜிபூரைச் சேர்ந்த நான்கு பயணிகள், தங்கள் விமான அனுபவத்தை பதிவு செய்ய பேஸ்புக்கில் நேரலைக்கு வந்தனர். சில நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோ காண்போரை நடுங்கச்செய்துள்ளது.

நேபாள இராணுவ செய்தித் தொடர்பாளரின் அறிக்கையின்படி, விபத்தில்  விமானத்தில் இருந்த 72 பேரும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளாது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.