முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

போதை பொருள் வழக்கு: ரகுல் பிரீத் சிங், ராணா உட்பட 12 சினிமா பிரபலங்களுக்கு சம்மன்

போதை பொருள் வழக்கில், நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சார்மி, நடிகர் ராணா, இயக்குநர் புரி ஜெகந்ந்தான் உட்பட 12 சினிமா பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தெலுங்கு திரை உலகில் போதைப்பொருட்கள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2017 ஆம் ஆண்டு திடீர் சோதனை நடத்தினர். பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், பிரபல இயக்குநர் பூரி ஜெகந்நாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு, நடிகர்கள் தருண், நவ்தீப், ரவி தேஜா, நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்பட 12 பேருக்கு போதைப்பொருள் பயன்படுத்தி யதில் தொடர்பிருப்பதாகத் தெரியவந்தது. இந்த வழக்கில், 62 பேர் விசாரணை செய்யப்பட் டனர். மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 11 பேர் வரை தெலுங்கு சினிமா துறைக்கு நெருக்கமானவர்கள்.

ரவிதேஜா

இதில் பல கோடி பணம் கைமாறி இருக்கலாம் என்பதால் அமலாக்கத்துறை இதில் தனியாக விசாரணை தொடங்கியது. இதில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதாக சந்தேகித்த அமலாக்கத்துறை, தொடர்ந்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் போதைப்பொருள் வழக்கில் சினிமா துறையினர் மீது ஏற்கனவே சந்தேகம் எழுந்ததால் 12 சினிமா பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை இப்போது சம்மன் அனுப்பி உள்ளது. நடிகைகள் ரகுல் பிரீத்தி சிங், ராணா, ரவிதேஜா இயக்குனர் புரி ஜெகந்நாத், நடிகை சார்மி, முமைத் கான் உள்ளிட்ட பலருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ரகுல் பிரீத் சிங் செப்டம்பர் 6 ஆம் தேதியும் ராணா செப்டம்பர் 8ஆம் தேதியும், ரவி தேஜா செப்டம்பர் 9 ஆம் தேதியும் இந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் இவர்கள் எல்லோரும் சாட்சியங்களாக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியிலும் வாரிசு திரைப்படம் வெளியாகும்- தயாரிப்பாளர் தில்ராஜூ

G SaravanaKumar

தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

EZHILARASAN D

அவசரமாக தரை இறக்கப்பட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர்-நடந்தது என்ன?

Web Editor