ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணைக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.
ஒடிசாவில் சரக்கு ரயில், இரண்டு பயணிகள் ரயில் என மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில் விபத்துக்கான மூலக்காரணத்தை கண்டறிவது மிகவும் முக்கியமானது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாயும், சிறிய காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : கோரமண்டல் விரைவு ரயில் விபத்து – பலி எண்ணிக்கை 233 ஆக உயர்வு!!
இந்த ரயில் விபத்து காரணமாக ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதையடுத்து ஒடிசாவில் இன்று அரசு சார்பில் நடைபெற இருந்த விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







