முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கோரமண்டல் விரைவு ரயில் விபத்து – பலி எண்ணிக்கை 233 ஆக உயர்வு!!

ஒடிசா அருகே கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹனகா என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதே நேரத்தில் மற்றோரு தடத்தில் வந்த யஷ்வந்தபூர் – ஹவுரா ரயில், தடம்புரண்டு விழுந்த பெட்டிகள் மீது மோதியது. இதில் ஹவுரா ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டது. விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் மற்றும் மீட்பு படையினர், தடம் புரண்ட பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமுற்ற 900-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நேரிட்ட பகுதி, வனப்பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும், மீட்பு பணியில் சற்றுதொய்வு ஏற்பட்டது.

விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் மொத்தம் 23 பெட்டிகளில் இவற்றில் 12 பெட்டிகளும் தடம்புரண்டுன. இந்த ரயிலில் பயணிக்க 869 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், இவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 200 பேர் பயணித்திருக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்து கொள்வதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : கோரமண்டல் விரைவு ரயில் விபத்து – உதவிகளை வழங்க தயார் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு

இதனிடையே இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் இருந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் தலைமையில் பணீந்தர் ரெட்டி, குமார் ஜயந்த், அர்ச்சனா பட்நாயக் ஆகிய 3 ஐஏஎஸ் அதிகாரிகள் குழு ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதிக்கு விரைந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

G SaravanaKumar

திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள், அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு: அமைச்சர் ஜெயக்குமார்

Saravana

சேலம் உருக்காலை பங்குகள் விற்பனை: மத்திய அமைச்சர் விளக்கம்

Web Editor