புதிய வகை கொரோனா பரவல் எதிரொலி; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட புதுச்சேரி அரசு

புதிய வகை கொரோனா பரவல் காரணாமாக புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக புதுச்சேரி அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையில், புதுச்சேரியில் உள்ள பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில்…

புதிய வகை கொரோனா பரவல் காரணாமாக புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக புதுச்சேரி அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையில், புதுச்சேரியில் உள்ள பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் வரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், புத்தாண்டு தினத்தன்று இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு தடை. அனைத்து கல்வி நிறுவனங்களும் கொரோனா பரவல் தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி. அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

aத்துடன், அனைத்து தனியார் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சராசரி நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாகவும், ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் 100% தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவு.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் முன்பு பின்பற்றிய கொரோனா பரவல் தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.