ஜம்மு காஷ்மீர் மாநிலம் சித்ரா நகர் தவி பாலம் அருகே பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டனர்.
இந்திய-பாகிஸ்தான் எல்லையான காஷ்மீர் பகுதியில் அவ்வப்போது தீவிரவாதிகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது வழக்கம். சட்டவிரோதமாக ஆயுதங்கள் கடத்துவது, போதைபொருள் கடத்துவது போன்ற தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே காஷ்மீர் எல்லைப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், ஜம்முவின் சித்ரா நகரில் தவி பாலத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சித்ரா நகர் தவி பாலம் பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் வந்த லாரியை மறித்து பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.
அப்போது, லாரிக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி லாரியில் இருந்து குதித்து தப்பியோடினர். இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஏடிஜிபி முகேஷ்சிங், வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில் லாரி ஒன்று வந்தது. அதனை பின்தொடர்ந்து வந்து ஜம்மு காஷ்மீர், சித்ரா நகரின் அருகே உள்ள தவி பாலத்தின் அருகே மடக்கி பிடித்தோம். அப்போது டிரைவர் லாரியிலிருந்து தப்பியோடினார். லாரியை சோதனையிட்ட போது, உள்ளே பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த பாதுகாப்பு படைவீரர்களை மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
உடனடியாக பாதுகாப்புபடை வீரர்களும் பதிலடியாக தாக்குதல் நடத்தினர். அதில் 2-3 தீவிரவாதிகள் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் பெரிய ஆயுதம் ஏந்தியிருந்தனர். அப்போது நடைப்பெற்ற துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் தப்பியோடி ஓட்டுநரை தேடும் பணி நடந்து வருவதாக தெரிவித்தார்