காரைக்குடி வணிக சங்க கழகத்தின் சார்பில் கிழக்கு கடற்கரை சாலை ரயில் பயணிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வணிகர் சங்க கழகத்தின் சார்பில், இன்று கிழக்கு
கடற்கரை சாலை பகுதியில் உள்ள வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் ரயில்
பயணிகள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர், முத்துபேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் செல்லும் ரயில் தடத்தை மின் வழி தடமாக மாற்றவும், நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் காரைக்குடி- மதுரை மற்றும் காரைக்குடி- திண்டுக்கல் ரயில்வே திட்டத்தையும் உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தினர். மேலும், காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் என்பன போன்ற 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காரைக்குடி வணிகர் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கிழக்கு
கடற்கரை சாலையோர பகுதியில் வசிக்கும் வணிகர்கள் மற்றும் ரயில் பயணிகள் சுமார்
60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.







