காட்டுமன்னார்கோவில் பகுதியில் தபால் நிலையத்திற்கு எதிரேயுள்ள மின்மாற்றி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஒத்த தெருவில் இயங்கிவரும் தபால் நிலையத்திற்கு எதிரில் மின்சார வாரியம் சார்பில் மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது அமைத்து பல வருடங்களாக பாராமரிப்பு இல்லாமல் இருப்பதால் சிமமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், இரும்பு கம்பிகள் துருப்பிடித்தும், இடிந்து விழும் நிலையில் உள்ளது. மின்மாற்றி அருகே கோவில், தபால் நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி, தனியார் மேல்நிலைப் பள்ளி ஆகியவை உள்ளதால் உயிர்ச்சேதம் ஏற்படும் வாய்ப்பு நிலவுகிறது.
எனவே இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் மின்வாரியத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: