முக்கியச் செய்திகள் விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட், பங்களாதேஷ் பேட்டிங்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய பாகிஸ்தான் அணி, இப்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மொனினுல் ஹக் தலைமையிலான பங்களாதேஷ் அணியில், யாசிர் அலி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார். அந்த அணியின் ஆல் ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் காயம் காரணமாக, அணியில் இருந்து விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவு. இதுவரை பாகிஸ்தான் அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணி வென்றதில்லை. இந்த போட்டியில் வெல்லும் முனைப்புடன் அந்த அணி களமிறங்கும்.

பந்துவீச்சு, பேட்டிங் என மிரட்டும் பாகிஸ்தான் அணி, டி-20 தொடரை கைப்பற்றியதை போல இந்த தொடரையும் கைப்பற்றும் நோக்கில் ஆடும்.

அணி விவரம்:
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், அபித் அலி, அசார் அலி, பாபர் அசாம் (கேப்டன்), பாவத் அலாம், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பஹீம் அஷ்ரஃப், நாமன் அலி, ஹசன் அலி, ஷகீன் ஷா அப்ரிதி, சஜித் கான்.

பங்களாதேஷ்: மொனினுல் ஹக் (கேப்டன்), சைஃப் ஹாசன், சதாம் இஸ்லாம், நஜ்முல் ஹூசைன், முஷிபிகும் ரஹிம், யாசிர் அலி, லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), மெஹிடி ஹாசன், தைஜுல் இஸ்லாம், அபு ஜெயத், எபாடாட் ஹூசைன்.

Advertisement:
SHARE

Related posts

புளியந்தோப்பு அடுக்குமாடி கட்டடத்தின் உறுதித்தன்மை: ஆய்வு செய்கிறது ஐஐடி

Ezhilarasan

சென்னையில் 307 பதற்றமான வாக்குச்சாவடிகள்!

Jeba Arul Robinson

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.68 லட்சம்

Ezhilarasan