முக்கியச் செய்திகள் உலகம்

ஹவாய் தீவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை ?

ஹவாய் தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிட்டர் அளவுகோளில் 6.2 ஆக இது பதிவாகி உள்ளது.

ஹாவாய் தீவுகளில் அவ்வப்போது நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஹவாய் தீவில் உள்ள நாலிஹூ பகுதியின் தென்கிழக்கே 27 கி.மீ தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 ஆக பாதிவானது. நிலநடுக்கத்தைத்தொடர்ந்து நிலஅதிர்வுகள் ஏற்பட்டது.

இது தொடர்பாக ஹவாய் அவசர கால மீட்பு படை அதிகாரிகள் கூறுகையில்‘இதுவரை பசிபிக் சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தில் இருந்து கிடைத்த தகவல்களை வைத்து பார்த்தால் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை. உள்ளூர் அதிகாரிகள் தொடர்ந்து சூழலை கண்காணித்து வருகின்றனர்’எனக் கூறினார்.

ஹவாய் தீவு முழுவதிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Advertisement:
SHARE

Related posts

‘மில்க் டீ அலையன்ஸ்க்கு’ஆதரவாக ‘எமோஜி’ வெளியிட்ட ட்விட்டர்!

வெள்ளை அறிக்கை என்றால் என்ன?

Saravana Kumar

அதிமுகவின் கடைசி தொண்டன் வரை திமுக ஆட்சிக்கு வருவதை தடுப்பார்கள்: ஓபிஎஸ்

Niruban Chakkaaravarthi