முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆவின் பாலில் இறந்த நிலையில் ‘ஈ’; அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்

மதுரை ஆவினிலிருந்து விற்பனை செய்யப்பட்ட பாலில் இறந்த நிலையில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சி அடைந்தனர்.

மதுரை ஆவினிலிருந்து நாள் ஒன்றுக்கு 5 இலட்சம் பால் பாக்கெட் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 40 வழித்தடங்களில் பால் பாக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது, நாகமலை பல்கலை அருகே ஆவின் டெப்போவில் விற்பனை செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டை வாங்கிய நுகர்வோர் ஒருவர் இறந்த நிலையில் ஈ இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து அந்த பாலை டெப்போவில் அந்த வாடிக்கையாளர் திருப்பி ஒப்பைடத்தார். இந்த தகவல் அறிந்து ஆவின் நிறுவன அதிகாரிகள் சம்பந்தபட்ட பால் டெப்போவிற்கு சென்று பால் பாக்கெட்டை திரும்ப பெற்று சென்றனர். மேலும் பால் பாக்கெட்டில் ஈ வந்தது எப்படி என விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலினை பேக்கிங் செய்யும் போது தவறு நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

EZHILARASAN D

ஆபாசப் பட விவகாரம்: ’என் கணவர் அப்பாவி..’ நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம்

Gayathri Venkatesan