முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மேகதாது விவகாரம்: மத்திய அமைச்சரை நாளை சந்திக்கிறார் துரைமுருகன்

மேகதாது உள்ளிட்ட தமிழ்நாடு நீர் ஆதார விவகாரங்கள் தொடர்பாக மத்திய நீர் வளத்துறை அமைச்சரிடம் பேச இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித் துள்ளார்.

டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நாளை சந்திக்கவுள்ளார். இதனிடையே, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை விவகாரம் குறித்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரியில் நீர்பங்கீடு செய்வது குறித்தும் மத்திய அமைச்சரிடம் பேச இருப்பதாக கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மார்கண்டேய நதியில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டியிருப்பது குறித்தும் பேச இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டார். மேகதாதுவில் அணைகட்ட தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையில்லை என கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சிவக்குமார் கூறியிருப்பது குறித்தும், நாளைய சந்திப்பின் போது விவாதிக்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் எது? வழக்கறிஞர் அஜிதா பதில்!

‘Covishield’ கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் கோரி விண்ணப்பம்!

Arun

மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசுகள் மேற்கொள்ளலாமா?

EZHILARASAN D