ஆந்திரப் பிரதேசம் குண்டூரில் பிறந்த ஷிரிஷா பண்டாலா வரும் 11-ம் தேதி ‘விர்ஜின் காலக்டிக்’ என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘யூனிட்டி 22’ திட்டத்தின் வாயிலாக விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்மூலம் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு விண்வெளி பயணம் மேற்கொண்ட கல்பனா சாவ்லாவுக்கு அடுத்து 2-வது இந்திய பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஷிரிஷா பண்டாலா.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ராகேஷ் ஷர்மா, கல்பானா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் வரிசையில் பார்த்தால் நான்காவது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக ஷிரிஷா பண்டாலா இடம் பெற்றுள்ளார்.
குண்டூரில் பிறந்த ஷிரிஷா பண்டலா அமெரிக்காவில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் முதுகலை படிப்பை 2011-ம் ஆண்டு முடித்துள்ளார். பின்னர் 2015-ம் ஆண்டு ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
பின்னர் அமெரிக்கத் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சனால் தொடங்கப்பட்ட ‘விர்ஜின் காலக்டிக்’ என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியில் இணைந்தார். 34 வயதாக ஷிரிஷா பண்டாலா தற்போது விர்ஜின் காலக்டிக் நிறுவனத்தில் இங்கிலாந்து – அமெரிக்க விண்வெளி துறையின் அரசு விவகாரங்களுக்கான துணைத் தலைவராக உள்ளார்.
இந்நிறுவனம் சார்பில் ‘யூனிட்டி 22’ ராக்கெட் வரும் 11-ம் தேதி நியூ மெக்சிகோவில் உள்ள ஏவுதளத்திலிருந்து செலுத்தப்படவுள்ளது. ஆறு விண்வெளி வீரர்கள் பட்டியலில் ‘விர்ஜின் காலக்டிக்’ நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன், பெத் மோசஸ், கோலின் பென்னட், ஷிரிஷா பண்டாலா, மைக்கேல் மசுக்கி, டேவ் மாக்கே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இதுகுறித்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஷிரிஷா பண்டாலா,“இந்த வாய்ப்பை மிகவும் கௌரவமாக நினைக்கிறேன். விண்வெளி பயணத்தை மக்கள் அனைவருக்கும் கொண்டு செல்லும் முயற்சியாகவே ‘யூனிட்டி 22 ராக்கெட்” திட்டம் வரும் 11-ம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ளது. விண்வெளி பயணம் மேற்கொள்ளும் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.