இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கு டிவிட்டர் இணங்க வேண்டியது கட்டாயம்: மத்திய அரசு

2021ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளுக்கு டிவிட்டர் இணக்கம் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள…

2021ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளுக்கு டிவிட்டர் இணக்கம் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில் கூறப்பட்டிருப்பதாவது:
“2021ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் விதிகளுக்கு இணக்கம் தெரிவிக்க சமூக வலைதள ஊடக நிறுவனங்களுக்கு மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம் கடந்த மே 26ம் தேதி முடிவடைந்து விட்டது. இந்தியாவின் தொழில்நுட்ப சட்ட விதிகளுக்கு டிவிட்டர் சமூகதளம் இணக்கம் தெரிவிக்கவில்லை.

ஒரு இடைக்கால முயற்சியாக க் கூட இந்தியாவை சேர்ந்த குறை தீர்க்கும் அதிகாரியை, தொடர்பு அதிகாரியை, தலைமை இணக்க அலுவலர் என்பவரை கடந்த ஜூலை 1ம் தேதி வரை டிவிட்டர் நியமிக்கவில்லை. அதே போல டிவிட்டர் இணையதளத்திலும் நேரடி தொடர்பு முகவரி எதுவும் வெளியிடப்படவில்லை.

2021ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டமானது இந்தியாவின் சட்டம். எனவே டிவிட்டர் அதற்கு இணக்கமாக செயல்பட வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது. எந்த ஒரு இணக்கமும் தெரிவிக்காத நிலையானது, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவுகளை மீறிய செயலாகும். இதன் மூலம் 2000ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 79(1)-ன் படி விலக்கு கோரும் உரிமையையும் டிவிட்டர் இழக்கிறது.” இவ்வாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.