திடீர் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக்கிற்கு அளிக்கப்பட்டவரும் சிகிச்சை குறித்து விவரங்களை காண்போம்.
நடிகர் விவேக் நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்நிலையில், இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவனையில், இதய பிரிவு மருத்துவர்கள் குழு உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது, இதயத்திற்கு செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதைக் கண்டறிந்தனர்.
அடுத்தக்கட்டமாக அவருக்கு கேத் லேப்பில் உள்ள Catheterization என சொல்லப்படும் இரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய ஸ்டெண்ட் வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்த போதும் நடிகர் விவேக் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இதயவியல் துறை மருத்துவர் ஸ்ரீநாத் சிகிச்சை மேற்கொள்கிறார். தற்போது கேத் லேபில் இருந்து மூன்றாவது மாடியில் உள்ள நெஞ்சக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட உள்ளார்.







